உத்தம நபியின் உன்னத சரித்திரமும் உயர்ந்த பண்புகளும்
Author: ஹைஸம் இப்னு முஹம்மத் ஸர்ஹான்
உத்தம நபியின் உன்னத சரித்திரமும் உயர்ந்த பண்புகளும்
الْمُخْتَصَرُ الْمُفِيدُ لِسِيرةِ النَّبِيِّ الْمُصْطَفَى ﷺ وَشَمَائِلِهِ د. هيثم بن محمد سرحان
(ஒரு பயன்மிகு சுருக்கம்)
தொகுப்பு: ஹைஸம் இப்னு முஹம்மத் ஸர்ஹான் அல்-மஸ்ஜிதுன் நபவியிலுள்ள ஹறம் கல்விக் கூடத்தின் முன்னாள் ஆசிரியர், மற்றும் என்ற இணையதளத்தின் மேற்பார்வையாளர்
தமிழில்:ஹுஸைன் இப்னு றஃபீக் (மதனி)
அள்ளாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிகள் நாயகம் ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் குணாதிசயங்களையும் சுருக்கமாக எடுத்துரைக்கும் பயன்மிக்க ஒரு நூல்
மாபெரும் அன்புடையோன் அருளாளன் அள்ளாஹ்வின் பெயரால்
எல்லாப் புகழும் அள்ளாஹ்வுக்கே. அவனைப் போற்றி, அவனிடம் உதவிவேண்டி, அவனிடம் மன்னிப்பும் கோருகின்றோம். எம் தீங்குகளிலிருந்தும், அள்ளாஹ்விடம் எம் ஆத்மாக்களின் செயல்களின் கெடுதிகளிலிருந்தும் பாதுகாப்புத்தேடி ஒதுங்கிக்கொள்கின்றோம். அள்ளாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிதவறவிட்டானோ அவரை எவராலும் நேர்வழிப்படுத்த முடியாது. அள்ளாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான நாயன் எவருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை ஏதுமில்லை என்றும் முஹம்மத் -ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் அள்ளாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்.
(يَأَيُّهَا الَّذِينَ عَامَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ [آل عمران (۱۰۲]
{நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அள்ளாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.} (அல்குர்ஆன் 3:102)
يَأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُم