கிதாபுத் தவ்ஹீத்
Author: Author: Asshaikh Salih Bin Fawzan Al-Fawzan Translator: H. Hasan Ali Umari
كتاب التوحيد கிதாபுத் தவ்ஹீத்
ஆசிரியர்: அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல்ஃபவ்ஸான் தமிழில்: மௌலவி ஹசன் அலீ உமரி
Title of the Book: KITABUTH TAWHEED Author: Asshaikh Salih Bin Fawzan Al-Fawzan Translator: H. Hasan Ali Umari Language: Tamil Copy Right: Ashaabul Hadeeth Publication, Chennai. Publisher: Ashaabul Hadeeth Publication, Chennai.
Gift Not for Sale
IRGC (IBNUL IQAYYIM ISLAMIC RESEARCH & GUIDANCE CENTRE)
Ibnul Qayyim Islamic Research & Guidance Centre 39, Gowdiya Mutt Road, Royapettah, Chennai - 14, Tamil Nadu, India. Ph: 0091 44 2813 3750 / e-mail: irgc1999@gmail.com / www.irgc.net
بسم الله الرحمن الرحيم
நுழையும் முன்...
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட எங்கள் நபி முஹம்மத் அவர்கள் மீதும், அன்னாரின் உறவினர், உத்தமத் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக!
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் தலையாயதான தவ்ஹீதைப் பற்றி அறிந்திருப்பது ஒரு முஸ்லிமுக்கு எவ்வளவு அவசியமானதாக உள்ளதோ, அவ்வாறே அந்த தவ்ஹீதுக்கு எதிரான நம்பிக்கைகளைக் பற்றி அறிந்திருப்பதும் அவசியமானதாக உள்ளது.
ஏனெனில், தவ்ஹீதுக்கு எதிராக இருக்கின்ற தவறான நம்பிக்கைகளை அறியாமல் ஒருவரால் தவ்ஹீதை சரியாக விளங்க முடியாது. மேலும் அவர் அந்தத் தவறான நம்பிக்கைகளை அறியாததால் அதனையே தவ்ஹீதாக கருதிடலாம். ஆகவேதான் இஸ்லாமியக் கொள்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அம்சங்களை உறுதிப்படுத்தியும், மறுக்க வேண்டிய அம்சங்களை மறுத்தும் நம்பிக்கை கொள்வது கட்டாயமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْ