ஏழு வகை தீட்சைகள்
Author: திருப்பூர். K. அமானுல்லாஹ்
இஸ்லாமிய (ஸூபி) ஆன்மீக முறையில் ஏழு தீட்சைகளும்
அவற்றின் உவமைகளும்:
நயன தீட்சை (பார்வை - தவஜ்ஜுஹ்/நஜர்)
விளக்கம்:
ஷேக் தனது ஆன்மீகப் பார்வையால் சீடனின் இதயத்தை நோக்குவது.
உவமை:
மீன் உவமை (மீன் தன் பார்வையாலேயே தன் முட்டைகளை அரவணைப்பது போல்).
ஸ்பர்ச தீட்சை (தொடுதல் - பைஅத்)
விளக்கம்:
ஷேக் சீடனின் கையைப் பற்றி ஆன்மீக வாக்குறுதி பெறுவதும் வழிகாட்டுவதும்.
உவமை:
பூனை உவமை (பூனை தன் குட்டிகளைத் தொட்டுப் பாதுகாப்பாக வளர்ப்பது போல்).
மானச தீட்சை (மனம்/தியானம் - ராபிதா)
விளக்கம்:
ஷேக் நேரில் இல்லாமல் தன் மன ஒருமைப்பாடால் (தியானத்தால்) சீடனுக்கு அருள்வது.
உவமை:
ஆமை உவமை (ஆமை நீரிலிருந்தபடியே கரையில் உள்ள முட்டையை மனதால் நினைப்பது போல்).
வாசக தீட்சை
(வார்த்தை - திக்ர் உபதேசம்)
விளக்கம்:
ஷேக் சீடனின் காதில் ரகசிய திக்ர் மற்றும் திருக்கல்மாவை ஓதித் தருவது.
உவமை:
தேனீ உவமை
(தேனீப் பூச்சி தன் கூட்டுக்குள் சென்று மற்ற தேனீக்களுக்கு வழிகாட்டும் ஒலியைத் தருவது போல்).
சாஸ்திர தீட்சை
(அறிவு - இல்ம்)
விளக்கம்:
குர்ஆன், ஹதீஸ் மற்றும் தஸவ்வுஃப் (ஞான) நூல்களின் தத்துவங்களைக் கற்பிப்பது.
உவமை:
தீபம் உவமை (ஒரு விளக்கில் இருந்து மற்றொரு விளக்கேற்றி வெளிச்சம் தருவது போல்).
யோக தீட்சை (ஆன்மீகப் பயிற்சி - முஜாஹதா / பாஸ்-இ அன்ஃபாஸ்)
விளக்கம்:
மூச்சுப்பயிற்சி மற்றும் ஆன்மீகச் சாதனை மூலம் மனதைக் கட்டுப்படுத்துவது.
உவமை:
தங்கத்தைச் புடமிடுதல் உவமை (நெருப்பில் இட்டுப் புடமிட்டுத் தங்கத்தின் அழுக்கை நீக்கிப் பிரகாசிக்க வைப்பது போல்).
ஹோத்ரி தீட்சை
(அர்ப்பணிப்பு - ஃபனா / இஹ்சான்)
விளக்கம்:
தன்னலத்தை