Cover of அஸ் ஸலாத் தொழுகை, தவறுகளும் விளக்கங்களும்

அஸ் ஸலாத் தொழுகை, தவறுகளும் விளக்கங்களும்

Author: மஷ்ஹுர் ஹஸன் அல் ஸல்மான்

அஸ் ஸலாத் - தொழுகை, தவறுகளும் விளக்கங்களும்
அனிந்துரை
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
உருவாக்கிய மனிதனின் சீரிய வாழ்க்கைக்கான சட்ட ஒழுங்கமைப்பை அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அச்சட்டங்களை மனிதனது வாழ்க்கையில் எவ்வாறு எடுத்து நடக்க வேண்டும் என்று முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிச் சென்ற இறைத் தூதர் நபி (ஸல்) அவர்கள் மீது கருணையும் சாந்தியும் உண்டாகட்டுமாக.
அஸ் ஸலாத் தொழுகை, தவறுகளும் விளக்கங்களும் எனும் இந்நூல் மஷ்ஹுர் ஹஸன் அல் ஸல்மான் என்பவரினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட The Clarified Ruling of Mistakes Done In Salath என்ற நூலிலிருந்து அப்துர் ரஹ்மான் ஆப்தீன் என்பவரினால் தொகுக்கப்பட்ட முக்கிய குறிப்புக்களை உள்ளடக்கிய Salath - Mistakes and Ruling என்ற நூலின் சுருக்கமான மொழிபெயர்ப்பாகும்.
தொழுகை ஒரு முஸ்லிமின் முக்கியமான கடமையாகும். அல்லாஹ்வை ஓர் அடியான் உள்ளார்ந்த ரீதியாக நெருங்குவதற்கான ஓர் மைல் கல்லாக இத்தொழுகை கனிக்கப்படுகின்றது. எனவே இப்பாரிய கடமையானது அதன் தூய வடிவத்தைப் பெறும்போதுதான் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்ட வணக்கமாக மாறுகின்றது. எனினும் இப்படியான கடமைகளை சரிவர நிறைவேற்றுவதில் முஸ்லிம்கள் அசிரத்தை காட்டுவதுடன் உரிய முறைகளைப் பின்பற்றித் தொழுவதில் பாரிய பின்னடைவைக் கொண்டுள்ளனர். "நான் தொழுவதை நீங்கள் எவ்வாறு பார்த்தீர்களோ அதுபோலவே நீங்களும் தொழுங்கள்” என்ற நபி (ஸல்) அவர்களின் வாக்கு இன்று மறக்கடிக்கப்பட்டு வேண்டப்படாத பல விடயங்கள் தொழுகையில் இனைக்கப்பட்டுள்ளன. இத்தவறுகளை சுட்டிக்காட்டி அதற்கான தெளிவுகளை முன்வைப்பதே ஆசிரியரின் நோக்கமாகும்.
அந்த வகையில் தொழுகையில் ஏற்படும் தவறுகளை தத்ரூபமாக சுட்டிக்காட்டி அவற்றை நீக்குவதன் அவசியத்தை எழுத்தாளர் கையாண்டுள்ளார். இந்

Download PDF