Cover of சொர்க்கத்திற்கு இட்டுசெல்லும் 50 காரணிகள்

சொர்க்கத்திற்கு இட்டுசெல்லும் 50 காரணிகள்

Author: Not specified

சொர்க்கத்திற்கு இட்டுச்செல்லும் காரணிகள்

بسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

சொர்க்கத்திற்கு இட்டுச்செல்லும் 50 காரணிகள்

1, 2- ஈமான் மற்றும் நல்லமல்கள்:

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்காரியங்களைச் செய்தார்களோ அவர்கள் சொர்க்கவாசிகள்! அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.

திருக்குர்ஆன்-2:82

3- தக்வா:

நிச்சயமாக அல்லாஹ்வை அஞ்சியவர்கள் சொர்க்கங்களிலும் (அவற்றில் உள்ள) நீரருவிகளிலும் இருப்பார்கள்.

திருக்குர்ஆன் - 15:45

உங்கள் இறைவனின் மன்னிப்பு இன்னும், சொர்க்கத்தின் பக்கம் விரையுங்கள். அதன் அகலம் வானங்களும் பூமியுமாகும். (அது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளது,

திருக்குர்ஆன்- 3:133

மக்களை அதிகம் சொர்க்கத்தில் நுழையச்செய்கின்ற காரியம் எது? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், "இறையச்சமும், நற்குணமும்" என்று பதிலளித்தார்கள்.

மக்களை அதிகம் நரகத்தில் நுழையச்செய்கின்ற காரியம் எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், "வாயும், மர்ம உறுப்பும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி : 2004, அஹாதீஸு ஸில்ஸிலதிஸ் ஸஹீஹா-977 ஹதீஸின் தரம்: ஹஸன் -முஹத்திஸ்: அல்பானி (ரஹ்)

4 அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக நிலைத்து இருத்தல்:

எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அவன் அருள்புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு,) அதில் உறுதியாகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன்- 46:13

நான் "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். "தங்களுக்குப் பிறகு யாரிடமும்" அல்லது "தங்களைத் தவிர

Download PDF