உலகம் போற்றும் உத்தம நபி 256
Author: ஸையித் இப்ராஹீம், எம்.ஏ., எல்.டி
உலகம் போற்றும் உத்தம நபி
உலகம் போற்றும் உத்தம நபி முன்னுரை இன்று "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் என்ற முழக்கம் உலகெங்கும் முழங்குகின்றது. "ஒரே உலகு வேட்கை உயர்ந்து நிற்கின்றது. மனித குலததைப் புனிதப்படுத்தும் இனிய இக்கொள்கைகளை ஒருவர் வேண்டி நின்ருர்; வாழ்வில் கண்டார். விரும்பிக் கொண்டாடுகிறது இவ்வுலகு அவரை உத்தமராகப் போற்றுகிறது.
இஸ்லாம் என்பது எல்லோரும் எளிதில் போற்றுதற்குரிய இனிய அறநெறியாகும். இவ்வுலகு தோன்றியது முதல் மெய்நெறி அறியாது, உய்யும்வகை தெரியாது, அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த மக்களை நல்வழியில் அழைத்துச் செல்ல பல நாடுகளில் பல்வேறுபட்ட காலங்களில் பல பெரியார்கள் தோன்றியுள்ளார்கள். சிறந்த சீர்திருத்தங்களைச் செய்துள்ளார்கள் என்று இஸ்லாம் எடுத்துக் கூறுகிறது. உலகம் ஒப்புகிறது. அந்த வரிசையிலே வந்து செயற்கரிய செய்த சீர்திருத்தச் செம்மலே நபிகள் நாயகம்.
உலக நலனுக்காக உழைத்த பெரியார்களில் ஒரு சிலர் சமயத் தலைவராகத் திகழ்ந்துள்ளனர்; பேரரசர்களாகத் திகழ்ந்துள்ளனர்; சமூக சீர்திருத்தவாதிகளாகத் திகழ்ந் துள்ளனர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் ஒப்பற்ற தொண்டாற்றியுள்ளனர். ஆனல், முஹம்மத் நபி மட்டும் சிறந்த சமயத்தலைவராக, சிறந்த சிந்தனையாளராக, அரசியல் தலைவராக, பொருளியல் வல்லவராக, சமூக சீர்திருத்த செம்மலாக விளங்கி, வியத்தகு தொண்டு செய்துள்ளனர். ஆகையினுல்தான் அவர்களை வியந்து பாராட்டுகிறது உலகம்.
விடுதலை அடைந்துள்ள நம்_இந்தியக் குடியரசில் எல்லோரும் இந்நாட்டு மன்னராவர். இளைஞர்களே குடியரசு இந்தியாவின் செல்வர்கள். எதிர்கால இந்தியாவின் ஏற்றத்தைத் தோற்றுவிக்க இருக்கும் இளைஞர்களின் உள்ளம் வளமடைய உலகம் போற்றும் உத்தம நபியின் வாழ்க்கை வரலாற்றை ஒரளவு தெரிந்து கொள்ளல் வேண்டுமென்பது எனது