நபிகள் நாயகம் முஹம்மத் நபிﷺ
Author: அப்துர் ரஹ்மான் ஷீஹா
நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) தமிழ் : அப்துர் ரஹ்மான் ஷீஹா
Osoul Center www.osoulcenter.com
உஸூல் நிறுவனம்
இந்நூலின் மூலப்பிரதி உஸூல் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டதாகும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் படங்களினதும் உரிமை இந்நிறுவனத்தையே சாரும். இதில் எவ்வித மாற்றங்களும் செய்யாமலும், வெளியீட்டளரின் பெயரைக் (உஸூல் நிறுவனம்) குறிப்படும் நிபந்தனையுடனும் இதனை அச்சிட்டு வெளியிட எமது நிறுவனம் அனைத்து முஸ்லிம்களுக்கும் அனுமதியளிக்கின்றது. அச்சிடும் போது இந்நிறுவனத்தின் அச்சுத் தரங்களைக் கடைபிடிக்குமாறும் நிறுவனம் வேண்டிக் கொள்கின்றது.
+966 504 442 532 +966 11 445 4900 +966 11 497 0126 P.O.BOX 29465 Riyadh 11457 osoul@rabwah.com www.osoulcenter.com
مركز اصول Osoul Center www.osoulcenter.com
முன்னுரை
புகழனைத்தும் வானங்கள், பூமி அதிலுள்ளவற்றின் படைப்பாளன், அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வுக்கே. சாந்தியும் சமாதானமும் அகிலத்தாருக்கு அருட்கொடையாக இறுதியாக அனுப்பப்பட்ட, அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவரைப் போன்றே மனிதர்களுக்கு நேர்வழி காட்டவும், இருள்களிலிருந்து ஒளியின்பால் அவர்களை மீட்டெடுக்கவும் இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்கள், ரஸூல்மார்கள் மீதும் உண்டாவதாக.
இதோ நாம் 'உஸூல் சர்வதேச அழைப்பாளர் மையம்'ல் இருக்கின்றோம். எமது புதிய வெளியீட்டின் மூலம் வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எமது இவ்வெளியீடுகள் அனைத்தினதும் குறிக்கோள் ஒன்றுதான். அது : இஸ்லாத்தின் யதார்த்தத்தையும், அதன் சிறப்பம்சங்களையும் தெளிவு படுத்துவதன் மூலம் சகல மக்களுக்கும் இஸ்லாத்தை முன்வைப்பதாகும். மேலும் மனிதர்களது அனைத்து வித பிரச்சினைக