இவன்தான் அல்லாஹ்
Author: S.கமாலுத்தீன் மதனி
இவன்தான் அல்லாஹ்
ஆசிரியர் S.கமாலுத்தீன் மதனி
இவன் தான் அல்லாஹ் (வணக்கத்திற்கு தகுதியானவன்)
ஆசிரியர் S.கமாலுத்தீன் மதனி
விலை ரூ.15/-
வெளியீடு : : ஹிரா பப்ளிகேஷன் 105, சந்தித் தெரு, இடலாக்குடி, கோட்டார், நாகர்கோவில் 629 002. - 94434 53943
அல்லாஹ் ஒருவனே இறைவன்
"அல்லாஹ் ஒருவனே! என்று சொல்வீராக! அவன் படைப்புகள் எதன் மீதும் தேவையற்றவன், (அவன்பால் எல்லாம் தேவையுடையவை) அவன் எவரையும் பெறவுமில்லை, அவன் எவராலும் பெறப்படவுமில்லை, மேலும் அவனுக்கு நிகராக யாருமில்லை எதுவுமில்லை. (அல்குர்ஆன் : 112)
திருமறையின் தோற்றுவாய்
அளவற்ற அருளாளன், நிகரற்ற கருணையாளன் அல்லாஹ்வின் பெயரால் துவங்குகிறேன்.
அகிலங்கள் அனைத்தையும் படைத்து, வளர்த்து இரட்சிக்கின்ற அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற கருணையாளன்.
அவன் நியாய தீர்ப்பு நாளில் அதிபதி.
அல்லாஹ்வே! வணங்குகிறோம், உன்னையே நாங்கள் உன்னிடத்திலேயே உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களுக்கு நேரான வழியை காண்பிப்பாயாக!
அவ்வழி நீ யார் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் சென்ற வழி.
அது உன் கோபத்திற்கு உரியோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
முகவுரை
கல்லிலும், மண்ணிலும், உலோகத்திலும், மரத்திலும் தன் கரத்தினால் வார்த்தெடுத்த சிற்பங்களை கடவுளாக மதித்து, அவற்றுக்கு முன் சாஷ்டாங்கம் செய்கின்ற மனிதர்களை அதிகம் பார்க்கின்றோம். அவற்றையெல்லாம் இறைவனாகக்கருதி, பல விதமான ஆற்றலும் இருப்பதாக நம்பி, தன்னுடைய எல்லாவிதமான தேவைகளையும் முறையிடுகின்றான் மனிதன். உண்மையாக அஞ்சி பயப்பட வேண்டிய இறைவனைப்பற்றி அறியாதவனாகவே அறியாதவனாகவே இருக்கிறான். தான் சிரம் பணிவதற்கும், தான் வழிப்பட்டு மரியாதை செய்வதற்கும் தகுதியானவன்