Cover of நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்?

நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்?

Author: M.S.M.இம்தியாஸ் யூசுப்

நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்? M.S.M.இம்தியாஸ் யூசுப் IslamHouse.com
நபித்தோழர்கள் சஹாபாக்கள் என அழைக்கப் படுவர். அல்லாஹ் தனது மார்க்கத்தை நிலை நாட்டுவதற்கு தேர்ந்தெடுத்த மக்களே சஹாபாக்களாவர். அவர்களை பண்படுத்தி தூய்மைப்படுத்தி சுவனத்திற்குரிய மக்களா கவும் அல்லாஹ் ஆக்கினான். இந்த உம்மதத்தின் முதலாவது முஃமின்களாக்கி அருள் புரிந்தான். அவர்களை தன்னுடைய நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு தோழர் களாக்கினான். 
சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.
கணவனை இழந்த விதவைகளாக தந்தையை இழந்த அனாதைகளாக சொந்தங்களை இழந்த அனாதரவற்ற வர்களாக வாழ்ந்தவர்கள்.
சஹாபா பெண்களும் ஆண்களுக்கு நிகராகவே யாகங்களை செய்தவர்கள். தங்களது கணவன் மற்றும் பிள்ளைகளை இஸ்லாத்தை நிலை நாட்டவே ஊக்குவித்து வளர்த்தவர்கள்.
தங்கள் கணவர்களையும் பிள்ளைகளையும் அல்லாஹ்வுக்காக உயிர்தியாகங்களை செய்ய ஆர்வமூ டி யவர்கள். விதவைகளாகி விட்டோம் பிள்ளைகள் அனாதைகளாகி விட்டார்கள் என்று சற்றும் கொள்ளாதவர்கள். கவலைக்கலப்பற்ற தூய எண்ணத்துடன் வஹியை சுமந்து நடமாடியதுடன் தங்கள் வாழ்க்கை யிலும் நிழலாடச் செய்தவர்கள்.
சஹாபாபக்களின் தியாகங்கள் உண்மை யானது அவர்களது இறைநம்பிக்கை அழுக்கற்றது. அவர்களது தோழமை உறுதியானதும் நேர்மையானதும் என்பதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.
அல்லாஹ் அந்த சஹாபாக்களை ஈமானுடன் வாழ்ந்து ஈமானுடன் மரணிக்கவும் செய்தான். அவர்கள் மூலமாக பல வெற்றிகளை அல்லாஹ் கொடுத்து இந்த மார்க்கத்தை உலக மக்களிடம் கொண்டு சே

Download PDF