Cover of நம்பிக்கையின் அடிப்படைகள்

நம்பிக்கையின் அடிப்படைகள்

Author: அஷ்ஷேஹ் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்)

நம்பிக்கையின் அடிப்படைகள்  
ஆசிரியர் : அஷ்ஷைக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன்  
தமிழில்:  கா. முஹம்மது பிலால் பாகவி  &   முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி  
بسم الله الرحمن الرحيم   عقيدة أهل السنة والجماعة  
பொருளடக்கம் பதிப்புரை   தாருல் ஹுதா - ஓர் அறிமுகம்   மதிப்புரை   முன்னுரை   நுழைவாயில்   அல்லாஹ்   மலக்குகள் (வானவர்கள்)   நூல்கள்   தூதர்கள்   மறுமை நாள்   விதி   அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதின் பலன்கள்   மலக்குகளை நம்பிக்கை கொள்வதின் பலன்கள்   நூல்களை நம்பிக்கை கொள்வதின் பலன்கள்   தூதர்களை நம்பிக்கை கொள்வதின் பலன்கள்   மறுமை நாளை நம்பிக்கை கொள்வதின் பலன்கள்   விதியை நம்பிக்கை கொள்வதின் பலன்கள்   நம்பிக்கையாளர்களிடம் இருக்கக் கூடாதவை   பதிப்புரை
அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அகிலத்தாரின் அருட்கொடை இறுதி இறைத்தூதர் முஹம்மது அவர்களுக்கும்,  nஅவர்களது குடும்பத்தார், தோழர்கள், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இறையருளும் ஈடேற்றமும் உண்டாகுக!  
அல்லாஹ், தனது படைப்பினங்களில் மனிதர்களை மிக உயர்ந்த படைப்பினமாக  ஆக்கியுள்ளான். மேலும், அவர்களை நேர்வழிப்படுத்துவதற்காகத் தூதர்களை  அனுப்பினான். வழிகாட்டும் நூல்களை இறக்கினான். மற்ற படைப்பினங்களை மனிதனுக்காகவே படைத்தான்; மனிதனை தன்னை வணங்குவதற்காகவே படைத்தான்.  
மனிதனின் முதல் கடமை தன்னைப் படைத்த இறைவனை அவன் கூறிய  விதத்தில் அறிந்து கொள்வதாகும். அடுத்து அவன் நம்மை எதற்காகப் படைத்தான்,  நாம் எப்படி வாழவேண்டும் என அவன் விரும்புகிறான், அவனுக்குப் பிடித்தது என்ன,  பிடிக்காதது என்ன ஆகியவற்றைத் தெரிந்து அதன்படி நடப்பதாகும்.  
இந்த இரண்டு விஷயங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவே அல்லாஹ் தனது நூல்களை இறக்கின

Download PDF