Cover of வளர்ச்சிக்கு வழிகோலும் ஜகாத்

வளர்ச்சிக்கு வழிகோலும் ஜகாத்

Author: சையத் அப்துர் ரஹ்மான் உமரி

வளர்ச்சிக்கு வழிகோலும் ஸகாத்
உஸ்தாத் - சையத் அப்துர் ரஹ்மான் உமரி
மர்யம் பப்ளிகேஷன்ஸ் கோயமுத்தூர் +91 7871 6111 73
ஆசிரியர்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி  விலை: Rs.25.00 பக்கங்கள்: 48 முதல் பதிப்பு: மே, 2017. ஷஅபான் 1438 ஒளி அச்சு: ஆஃபாக், 7871611173 அச்சு: SKS Print, சென்னை, 044 2861 2709 வெளியீடு: மர்யம் பப்ளிகேஷன்ஸ் 28, காவேரி நகர் இரண்டாம் தெரு, குனியமுத்தூர், கோயமுத்தூர். 641 008 தொடர்புக்கு: 9171411515, 7871611173  E-mail : syedumari@ymail.com
بسم الله الرحمن الرحيم
பதிப்புரை
இறையருள் நிலமெங்கும் பரவட்டும்! இறைவழிகாட்டு தலின் படிசெயல்பட்டு மாநிலம் தழையட்டும்!
செல்வத்தை சிலர் தனியுடைமையாகப் பார்க்கின்றார்கள். தாங்கள் சம்பாதித்தது தங்களுக்கு உரியதே என்பது அவர்களது கோட்பாடு. இன்னும் சிலரோ செல்வத்தை பொதுவில் வைக்க முயற்சிக் கின்றார்கள். செல்வம் பொதுச்சொத்து!. 
உனக்கு என்ன தேவை யோ அதை நீ பெற்றுக் கொள் என்கின்றார்கள் இத்தகையோர்.
செல்வத்தையும் செல்வத்தைப் பற்றி மேற்கண்டபடி கூறு கின்ற மனிதர்களையும் படைத்த ஓரிறைவனின் மார்க்கமான இஸ்லாம் என்ன கூறுகின்றது? செல்வம் இறைவனுக்கு உரியது!.
தனது கருணையால் அவனாகப் பார்த்து உங்களுக்குக் கொடுத் துள்ளான். ஆகையால் அவன் சொன்னபடி அவன் சொன்ன வழி யில் அதனைச் செலவு செய்யுங்கள்! - என்கின்றது, இஸ்லாம்!.
இதோ, 'மேலும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள்'. (அல்குர்ஆன் 24:33)
எல்லா இபாதாக்களையும் மக்கள் ஒருவித அலட்சிய மனோ பாவத்தோடு தான் அணுகுகின்றார்கள். அதிலும் ஸகாத் விஷயத் திலோ சொல்லவே தேவையில்லை. 
ரமழான் மாதம் வந்து விட்டால் ஸகாத்தைக் குறித்து ஏராளமானோர் நேரிலும் போனிலும் சந்தேகம் கேட்

Download PDF