நான் திருந்த வேண்டும், ஆனால்..!!
Author: அஷ்ஷேஹ் முஹம்மது ஸாலிஹ் அல்-முனஜ்ஜிது
நான் திருந்த வேண்டும்.. ஆனால்...!!
மூலநூல்: அஸ்ஸெய்க் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் ஹபிழஹூல்லாஹ்
தமிழாக்கம்: அப்துல் கபூர் முஹம்மது ஜெலீல் (மதனி)
அறபுலக அறிஞர் அஸ்ஸெய்க் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் அவர்களின என்ற நூலைத்தழுவி எழுதப்பட்டது.
உள்ளடக்கம்
முன்னுரை பாவங்களை அலட்சியமாகக் கருதுவதன் விபரீதம் பெரும்பாவம் என்றால் என்ன? நம்பிக்கை சம்பந்தப்பட்ட பாவங்கள் துர் நடத்தைக் குற்றங்கள் சமூக, வாழ்வியல், உரிமை மீறல்கள் தவ்பாவின் நிபந்தனைகள் பாவச்செயலால் ஏற்படும் விபரீதங்கள் உண்மையான தவ்பா அனைத்துப் பாவங்களையும் அழித்துவிடும். அல்லாஹ் என்னை மன்னிப்பானா?? 100 கொலை செய்தவனுக்கும் மன்னிப்பு உண்டா? கெட்ட நண்பர்களின் சகவாசம் வேண்டாம் எங்கே நிம்மதி? திருந்தி வாழ நினைப்போர் கேட்ட சில ஐயங்களும் அவற்றக்கான பதில்களும் மார்க்கக் கல்வியின் அவசியம் பற்றி சில நபிமொழிகள்..
புகழனைத்தும் ஏக வல்ல இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். அவன் நேர்வழிகாட்ட வேண்டுமென நாடியோரை யாராலும் வழிகெடுக்க முடியாது அவன் வழிகெடுக்க விரும்பியோருக்கு யாராலும் நல் வழிகாட்டவும் முடியாது. ஸலவாத்தும் ஸலாமும் முழு மனித சமூதாயத்துக்கும் நேர்வழிகாட்டும் விளக்காக வந்த உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் காட்டித்தந்த நேர்வழியைப் பின்பற்றி நடந்து வெற்றி பெற்ற அனைவருக்கும் உரித்தாகட்டுமாக..
அல்லாஹூத்தஆலா மனிதனை இருபிரிவுகளாக வகுக்கின்றான். ஓன்று வெற்றிபெற்றவர்கள் இரண்டாம் பிரிவினர் அநியாயக்காரர்கள். அல்லாஹ் கூறுகின்றான்.. விசுவாசிகளே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நீங்கள் வெற்றியடைவீர்கள்(ஸூரா நூர்:31) என்றும் மற்றொரு இடத்தில்.. யார் பாவமன்னிப்புக் தேடவில்லையோ அவர்களே அநியாயக்காரர்கள்(ஹூஜூராத்1