ரஹ்மத்தான ரமழான் - சிறப்புகள் | ஒழுக்கங்கள் | சட்டங்கள்
Author: அஷ்ஷேஹ் சயீது இப்னு அலி இப்னு வஹஃப் அல்கஹ்தானி
صِيَامُ رَمَضَان فَضَائِلُهُ وَآدَابُهُ وَأَحْكَامُهُ
ரஹ்மத்தான ரமழான் - சிறப்புகள் | ஒழுக்கங்கள் | சட்டங்கள்
ஆசிரியர்: அஷ்ஷைகு, முனைவர் சயீது இப்னு அலி இப்னு வஹஃப் அல்கஹ்தானி தமிழாக்கம்: குர்ஆன், சுன்னாவின் பணியாளர் உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம்
About this Book
Name of the Book : RAHMATHANA RAMALAN Name in Arabic : AS-SIYAM FIL ISLAM Language : Tamil Author : Saeed ibnu Ali ibnu wahab al kahthani Translator : Mufti A. Omar Sheriff Qasimi Proof Readers : O.M. Kaja Mohaideen Rabbani, A. Abdul Kader Rabbani, Mansur Ahmed Umari, Imamuddin Hasani, Saifuddin. Layout : Z. Abdul Bari Sadaqi Date of Publication : 2nd April 2019 Edition : April 2018 Total Pages : 140 Copies : 3000 Printed by : Patel Graphics, Chennai - 6 PUBLISHED BY: DARUL HUDA QUALITY ISLAMIC BOOK PUBLISHERS # 211 (102), 1st Floor, Linghi Street, Mannady, Chennai-600001. Phone : +91-44-25247866, darulhuda.chennai@gmail.com Mobile +91-98401 74121 www.darulhuda.net
பதிப்புரை
நிகரற்ற கருணையாளனும் எல்லையின்றி கருணைபுரிபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
படைத்து பரிபாலித்து சர்வ வல்லமையுடன் ஆட்சி புரிகின்ற அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! ஸலவாத்தும் ஸலவாத்தும் சலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும்.
இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து கடமைகள் பற்றி தெளிவான ஒரு நூலை வெளியிட வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசைப்பட்டு வந்தோம். அல்லாஹ் அந்த ஆசையில் சிலவற்றை இப்போது எளிதாக்கி தந்துள்ளான்.
கலிமா, தொழுகை, ஸகாத்து, நோன்பு, ஹஜ் ஆகிவற்றைப் பற்றி சில சுருக்கமான நூல்களை ம