இஸ்லாமியக் கொள்கை பற்றிய சுருக்கமான ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்
Author: அஷ்ஷெயிக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்)
இஸ்லாமியக் கொள்கை பற்றிய சுருக்கமான ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்
அஷ்ஷெயிக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்)
இஸ்லாமியக் கொள்கை பற்றிய சுருக்கமான ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்
نبذة في العقيدة الإسلامية الإصدار الثاني تاميلي
ஆக்கம்: பேரறிஞர் அஷ்ஷைக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) பக்கம் - 85
Telephone: +966114454900 @ceo@rabwah.sa P.O.BOX: 29465 RIYADH: 11557 www.islamhouse.com
அல்லாஹ் அவரதும், அவரது பெற்றோரினதும், அனைத்து முஸ்லிம்களினதும் பாவங்களை மன்னிப்பானாக!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்
முன்னுரை
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே, அவனைப் போற்றி, அவனிடமே உதவியும் தேடுகிறோம், அவனிடமே பாவமன்னிப்புக்கோரி மீளுகிறோம், எமது உள்ளங்கள் மற்றும் செயற்களின் தீங்குகளிலிருந்து அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறானோ அவரை வழிகெடுப்போன் யாருமில்லை. யாரை அவன் வழிதவறச்செய்கிறானோ அவரை நேர்வழி காட்டுவோன் யாரும் இல்லை. மேலும் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை, அவனுக்கு எந்த இணையாளருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். மற்றும், முஹம்மத் (ஸல்)அவர்கள் அவனின் அடியாரும் திருத்தூதருமாவார் எனவும் நான் சான்று பகர்கிறேன். நபியவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் தோழர்கள் மறுமை நாள்வரை அவர்களை நல்ல முறையில் பின்பற்றி நடப்போர் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் ஸலாதும் அவனின் ஸலாமும் உண்டாவதாக.
நிச்சயமாக ஓரிறைக் கொள்கை பற்றிய அறிவுதான் அனைத்து அறிவுகளிலும் மிகச் சிறந்ததாகும், மதிப்பு மிக்கதாகும், வேண்டப்படுவதில் மிக அவசியமானதுமாகும். ஏனெனில் அது அல்லாஹ்வையும், அவனது பெயர்கள், பண்புகள், மற்றும்