Cover of உடன்பாடும் முரண்பாடும் (அடிப்படைகளும் சட்டங்களும்)

உடன்பாடும் முரண்பாடும் (அடிப்படைகளும் சட்டங்களும்)

Author: ஸாலிஹ் இப்னு ஹானிம் அஸ்ஸஜ்லான்

உடன்பாடும் முரண்பாடும் (அடிப்படைகளும் சட்டங்களும்)



அரபியில் : ஸாலிஹ் இப்னு ஹானிம் அஸ்ஸஜ்லான்

தமிழில் : MBM. இஸ்மாயில் (மதனி)



அரபியில்: ஸாலிஹ் இப்னு ஹானிம் அஸ்ஸஜ்லான்

(இஸ்லாமிய சட்டக்கலைப் பிரிவின் உயர் கற்கை நெறிகளுக்கான ஆசிரியர், இமாம் முஹம்மத் இப்னு ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - ரியாத்)



தமிழில்: M.B.M. இஸ்மாயில் (மதனி)

(அதிபர், தாறுஸ்ஸலாம் அரபுக் கல்லூரி, வாழைச்சேனை.)



முன்னுரை



முஃமின்களை சகோதரர்களாக ஆக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். ஈமானிய சகோதரர்களாக இருப்பதே மிகச் சிறந்த சகோதரத்துவம். அவர்களுடைய உள்ளங்களுக்கு மத்தியிலே அல்லாஹ் ஒற்றுமையை ஏற்படுத்தினான். அவர்கள் பிரிந்து கிடந்ததற்கு பிறகு அவர்களை பலமான கட்டிடம் போன்ற அமைத்தான். 



அல்லாஹ்வை அதற்காக நாங்கள் புகழுகிறோம். இஸ்லாமிய சமூகத்தை மனித சமூகத்திற்காக வெளியேற்றப்பட்ட சமூகங்களிலே சிறந்த சமுதாயமாக அவன் ஆக்கினான். ஏனையவர்களை விடவும் அவர்களை சிறப்பித்தான். அல்லாஹ்விற்கு அதற்காக நன்றி செலுத்துகிறோம். தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அவனுடைய அடியார்களான முஃமின்களின் உள்ளங்களை விசாலப்படுத்தினான். தெளிவான ஆதாரங்களைக் கொண்டு சத்தியத்தின் அழைப்பாளர்களை உறுதிப்படுத்தினான். மனோ இச்சைகளைப் பின்பற்றுவதை விட்டும் அவனுடைய தௌபீக்கைக் கொண்டும் அவனுடைய பாதுகாப்பைக் கொண்டும் அவர்களுடைய உள்ளங்களை ஒளியேற்றினான். 



மேலும் அவனுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதே நாங்கள் ஸலவாத்தும் ஸலாமும் சொல்கின்றோம். அவர் அல்லாஹ்வுடைய பாதையின் பால் சிறந்த உபதேசங்களைக் கொண்டும் மிக நுட்பமான அறிவைக் கொண்டும் மக்களை அழைத்தார். அவருடைய குடும்பத்தார், தோழர்கள், நல்ல முறையில் மறுமை நாள் வரை அவரை பின்பற்றி நடப்போர

Download PDF