முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம்
Author: மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி
முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம்
மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி
சாஜிதா புக் சென்டர் 248, தம்புசெட்டித் தெரு, முதல்மாடி, சென்னை-600001 போன்: 044-2522 4821
விலை: ரூபாய் 35.00
நூலின்பெயர்: முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஆசிரியர்: மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி வெளியீடு: ஸாஜிதா புக் சென்டர், 248, தம்புசெட்டித் தெரு, முதல்மாடி, சென்னை-600001 முதல் பதிப்பு: ஜூலை 2008 ரஜப் 1429 பக்கங்கள்: 96 கணிணி அச்சாக்கம்: அஹத் கிராஃப்வே, மதுரை அச்சு: ஸாஜிதா அச்சகம், சென்னை விலை: ரூபாய் 35.00 Price: Rs 35.00
☐ Title of the Book: Adham AS Compiled By: Moulawi Syed Abdur Rahman Umari First Edition: July 2008 - Rajab 1429 Published by: Sajidha Book Centre, 248, ThambuChetty Street, First Floor, Chennai-1 Pages :96 Price: Rs.35.00
பதிப்புரை
வான்மறை குர்ஆன் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களைப் பற்றி கூறுகின்றது. போகிறபோக்கில் சொல்லிவிட்டுச் செல்கின்ற கதைகளாக இல்லாமல் இறைநம்பிக்கையை மனதில் தேக்கியுள்ள முஃமின்களுக்கு உத்வேகமூட்டும் அவர்களை மேலும்மேலும் உழைக்கத்தூண்டும் கிரியாஊக்கியாக திகழுகின்றன.
வரலாற்றுச் சம்பவங்களில் இருந்து எவற்றை நாம் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் குர்ஆன் குறிப்பிடுகின்றது. மூஸா அலைஹிஸ் ஸலாமுக்கு ஹாரூன் அலைஹிஸ் ஸலாம் அண்ணனா தம்பியா என்றெல்லாம் யோசித்துக்கொண்டு காலத்தைக் கழிப்பதை குர்ஆன் ஆதரிக்கவில்லை.
ஆதம் அலைஹிஸ்ஸலாமுடைய வரலாற்றை குர்ஆன் கற்றுக் கொடுக்கும் முறையிலேயே இங்கு வாசகர்களுக்கு அளித்துள்ளோம். நேர்வழிகாட்ட வந்த நூல் என்றால் நாம் வாழும் இன்றைய வாழ்க்கைக்கு அது பயனளிக்கவேண்டும். வெறுமனே சம்பவங்களின் கோர்வையாக இருந்தால் அதனால் நமக்கு எந்