இஸ்லாமிய ஒழுக்கவியல்
Author: மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலபி
இஸ்லாமிய ஒழுக்கவியல்
மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலபி
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா
வெளியீட்டெண் -17
இஸ்லாமிய ஒழுக்கவியல்
ஆசிரியர்: எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்-உண்மை உதயம் மாத இதழ்)
வெளியீடு: ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா பறகஹதெனிய, வேஉட,ஸ்ரீலங்கா.
புத்தக விபரத் தொகுப்பு
நூல் பெயர் : இஸ்லாமிய ஒழுக்கவியல் ஆசிரியர் : எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி மொழி : தமிழ் பக்கங்கள் : 40 பிரதிகள் : 2000 நூலின் அளவு : 1/8 கிரவுன் அச்சுக்கோர்வை : ஷிபா கிராஃபிக்ஸ், சென்னை-1. செல்: 98403 61227 அச்சிட்டோர் மாஹின் பிரிண்டர்ஸ் : சென்னை 1. போன்: 25225143 வெளியீடு : ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா
கிடைக்குமிடம் : சாஜிதா புக் சென்டர் 248, தம்புச் செட்டித் தெரு, முதல் மாடி, சென்னை - 600001.
போன்: 044 - 25224821 செல்: 98409 77758
விலை ரூ.12.00
முன்னுரை
அளவில்லா அன்பும் நிகரில்லா அருளும் நிறைந்த அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பிக்கின்றேன்.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அவர்காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!
அபிவிருத்தி, முன்னேற்றம் என்பது உண்மையில் பொருளாதாரத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை. ஒழுக்க விழுமியம் மிக்கதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பும்போதே உண்மையான சமூக முன்னேற்றத்தைக் காணமுடியும். இவ்வகையில் ஒழுக்க வாழ்வு மிக முக்கியமானதாகும்.
எல்லா சமயங்களும் ஒழுக்கவியல் கோட்பாடுகளைப் போதித்திருப்பினும் இஸ்லாம் அதிலும் தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளது. இச்சிறு நூலில் முடிந்தவரை சுருக்கமாகவும், தெளிவாகவும் ஒழுக்க வாழ்வுக்கான ஊட்ட